தேசிய தலைநகரில் சனிக்கிழமை அன்று வெயில் நாளாக அமைந்தது. பனி குறைந்து, 5 டிகிரிக்கு கீழ் வந்தது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வானம் மழைமூட்டத்துடன் லேசான மழையுடன் இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை முதல் லேசான காற்று வீசுவதால் காற்றின் தரம் 'மிகவும் மோசமானது' என்பதிலிருந்து 'மோசம்' எனும் வகைக்குள் வந்து சற்று மேம்பட்டது.
குறைந்தபட்ச வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஷாக பதிவாகியுள்ளது, அதிகபட்சம் 21 டிகிரி வரை வர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காரணமாக குறைந்தது 21 ரயில்கள் தாமதமாக வந்தன.
மையம் நடத்திய காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சஃபர்) அறிக்கையின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 208 இல் 'மோசம்'அதாவது 208 ஆகவும், பிம் எம்10 உடன் 118 ஆகவும், பி எம் 2.5 63 ஆகவும் இருந்தது. பின்னர் தில்லியில் உள்ள ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் அறிக்கையின் படி மேலும் முன்னேற்றம் இருப்பதாக சஃபர் கூறியது.
ஆனால் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


