வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நேரம் கிடைக்கும்போது படியுங்கள்: மோடிக்கு காங்கிரஸ் அனுப்பிய பரிசு

​குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை காங்கிரஸ் கட்சி பரிசாக அனுப்பியுள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2020, 6:28 am

DIN


குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை காங்கிரஸ் கட்சி பரிசாக அனுப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவில்,

"அரசியலமைப்புச் சட்டம் விரைவில் உங்களை வந்தடையும். நாட்டைப் பிரிப்பதில் இருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, தயவுகூர்ந்து இதைப் படியுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவுடன் அமேஸான் மூலம் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுக்கான ரசீதையும் இணைத்துள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதால், இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமரிசித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமருக்கு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.