நிர்பயா குற்றவாளி முகேஷ் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை
கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நிர்பயா குற்றவாளி முகேஷ் குமார் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.


புது தில்லி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நிர்பயா குற்றவாளி முகேஷ் குமார் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் தரப்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முகேஷ் குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
முகேஷ் குமார் சார்பில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார் என்றால், அதை விட அவசர வழக்கு வேறு எதுவும் இல்லை. தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். எனவே வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் சென்று முறையிடுமாறு வழக்குரைஞருக்கு அறிவுறுத்தினார்.
முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜனவரி 17ம் நிராகரித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...