இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வரலாற்று அநீதியை சரிசெய்யவே சிஏஏ கொண்டுவரப்பட்டது: பிரதமர் மோடி

வரலாற்று அநீதியை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார்.

News image
Updated On :28 ஜனவரி 2020, 11:38 am


வரலாற்று அநீதியை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார்.

தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு தில்லியில் இன்று நடைபெற்றது. இதில், மாணவர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டு அவர்களது மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

"சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே ஜம்மு காஷ்மீரில் பிரச்னை நிலவி வருகிறது. சில குடும்பங்களும், அரசியல் கட்சிகளும் அங்கு பிரச்னையை உயிர்ப்புடனே வைத்திருந்தனர். இதன் விளைவாக அங்கு பயங்கரவாதம் செழித்தோங்கியது. பல தசாப்தங்களாக நிலவி வரும் நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளை சரிசெய்ய தற்போதைய அரசு முயற்சிக்கிறது.

அண்டை நாடு மூன்று போர்களில் தோற்றுள்ளது. இருப்பினும், அந்த நாடு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மறைமுகப் போரைத் தொடுக்கிறது.

இந்தப் பிரச்னையை முந்தைய அரசு சட்டம் ஒழுங்கு பிரச்னையாகக் கருதியது. ராணுவமே தாக்குதலுக்கு அனுமதி கோரினாலும், அந்த அரசு அதை முன்னெடுத்துச் செல்லாது.

தற்போது ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளும் அமைதிப் பூங்காவாக உள்ளது. பல தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு பூர்த்தி செய்துள்ளது.

வரலாற்று அநீதியை சரிசெய்யவும், அண்டை நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற பாஜகவின் பழைய வாக்குறுதியை நிறைவேற்றவும் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், போடோ உடன்படிகை, முத்தலாக், சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது உள்ளிட்டவற்றை இந்த அரசின் சாதனைகளாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.