ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோட்சேவும், மோடியும் ஒரே கொள்கையைத்தான் நம்புகின்றனர்: ராகுல் காந்தி

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே கொள்கையைத்தான் நம்புகின்றனர் என்று வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2020, 11:07 am

DIN


மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே கொள்கையைத்தான் நம்புகின்றனர் என்று வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் "அரசியலமைப்பைப் பாதுகாப்போம்" என்ற பேரணி  இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி,

Story image

"ஒன்றும் தெரியாத நபர் ஒருவர் காந்தியின் கொள்கைக்கு சவால் விடுக்க முயற்சிக்கிறார். அவர் வெறுப்புணர்வுகள் நிறைந்த சூழலை உருவாக்குகிறார். ஒரே கொள்கைதான். நாதுராம் கோட்சேவும், நரேந்திர மோடியும் அந்த ஒரே கொள்கை மீதுதான் நம்பிக்கை கொண்டுள்ளனர். கோட்சேவின் கொள்கை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்பதைக் கூற மோடிக்கு தைரியம் கிடையாது. இதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.

Story image

இந்தியர்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யார் இந்தியர் என்பதைத் தீர்மானிக்க நரேந்திர மோடி யார்? அவருக்கு இதற்கான அதிகாரத்தைக் கொடுத்தது யார்? நான் இந்தியன் என்பது எனக்குத் தெரியும், அதை யாரிடமும் சென்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் 140 கோடி மக்களும் தாங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.