சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலம் மூன்றாவது இடம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் ம்,மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2020, 10:28 am

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் ம்,மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://cbseresults.nic.in. என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.

தேர்வு முடிவுகளின்படி, இந்தியாவில் 88.78 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 83.40 சதவிகிதமாக உள்ளது. எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% அதிகம் பதிவாகியுள்ளது.  

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 97.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து பெங்களூரு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு 97.05% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தை சென்னை மண்டலம் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.