இந்த வாரத்தில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை எட்டிவிடும்: ராகுல் காந்தி
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்த வாரத்தில் 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.


புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்த வாரத்தில் 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
தனது சுட்டுரையில் ராகுல் கூறியிருப்பதாவது, இந்த வாரம் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுட்டுரையுடன், உலகில் கரோனா தொற்றுப் பரவலை மிகவும் கவனத்துடன் கையாளவில்லை என்றால், தற்போதிருக்கும் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலையை அடைந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் செய்தியையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்தியாவில் ஒரே நாளில் 28,498 பேருக்கு கரோனா பாதித்ததை அடுத்து, மொத்த பாதிப்பு 9 லட்சத்தை எட்டியது. நாட்டில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தைத் தொட்டு வெறும் மூன்று நாள்களில் 9 லட்சத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...