6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாம் வெள்ளம்: மோசமடையும் நிலைமை

​அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் பாதிப்பால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

News image
​அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் பாதிப்பால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. (கோப்புப்படம்)
Updated On :16 ஜூலை 2020, 11:56 am

DIN


அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் பாதிப்பால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று (வியாழக்கிழமை) காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் நேற்று மாலை முதல் 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 68 ஆகியுள்ளது.

வெள்ளத்தால் பாதித்தோரின் எண்ணிக்கையும் இன்று காலை ஒரு லட்சத்துக்கும் மேல் உயர்ந்து 36,42,546 ஆகியுள்ளது.

Story image

அசாமில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 247 மீட்பு முகாம்களில் 37,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். 91 வருவாய் வட்டங்கள் மற்றும் 3,363 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Story image

பிரம்மபுத்திரா நதி 5 இடங்களிலும், கோப்பிலி நதி 2 இடங்களிலும் என அசாமில் ஓடும் 8 பிரதான நதிகளும் அபாயகர கட்டத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கினறன.

Story image

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் 295 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.