மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. காவல்துறை

ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2020, 1:17 pm


புது தில்லி: ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை இன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் அறிக்கையில், என்கவுண்டர் நடந்தது மிகச் சரியானதே. மற்றும் வேறு வழியில்லாமல் நடத்தப்பட்டது, அதை போலி என்கவுண்டர் என்று சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.