ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அசாம் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸாருக்கு  ராகுல் கோரிக்கை

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அசாம் மாநிலத்துடன் ஒட்டுமொத்த தேசமும் உள்ளது என்று கூறியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,

News image
அசாம் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸாருக்கு  ராகுல் கோரிக்கை
Updated On :18 ஜூலை 2020, 5:19 am

PTI


புது தில்லி: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அசாம் மாநிலத்துடன் ஒட்டுமொத்த தேசமும் உள்ளது என்று கூறியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த பேரிடரில் இருந்து நிச்சயம் அசாம் மக்கள் மீண்டு எழுவார்கள் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சுமார் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், ஒட்டுமொத்த தேசமும் அசாம் பக்கம் நிற்கிறது.

இந்த பேரிடர் காலத்தில் இருந்து அசாம் மக்கள் இயற்கையாகவே தங்களுக்கு அமைந்திருக்கும் தன்னம்பிக்கையோடு மீண்டு எழுந்து வருவார்கள். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியனோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.