கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜம்மு-காஷ்மீர்: ரஜெளரி அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் கைது

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்த நபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.

News image
ஜம்மு-காஷ்மீர்: ரஜெளரி அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்தவர் கைது
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

PTI


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்த நபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.

நௌஷேரா செக்டார் அருகே நடமாடிக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடுருவல்காரரை வெள்ளிக்கிழமை இரவு பார்த்த இந்திய ராணுவத்தினர் உடனடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாள்களில் இதுபோன்ற ஊடுருவல் நடப்பது இது இரண்டாவது முறையாகும்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதி, நக்யால் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரெஹ்மான் (28) கடந்த 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பூஞ்ச் மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.