தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எட்டு மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு; ஆட்டோவில் பிறந்த குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்து மரணம் அடைந்தது.

News image
எட்டு மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு; ஆட்டோவில் பிறந்த குழந்தை பலி
Updated On :22 ஜூலை 2020, 9:44 am

DIN


பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்து மரணம் அடைந்தது.

பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணியை அனுமதிக்க படுக்கை வசதி இல்லை என்று கூறி எட்டு மருத்துவமனைகள் திருப்பி அனுப்பிய நிலையில், கடைசியாக ஒரு மருத்துவமனைக்குள் செல்லும் போதே, ஆட்டோவுக்குள்ளேயே குழந்தை பிறந்து மரணம் அடைந்துவிட்டது.

இது குறித்த விடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற அவலம் நடப்பதாகவும் அந்த விடியோவை பகிர்ந்த நபர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கேசி பொது மருத்துவமனை வளாகத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை உயிர்பிழைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து ஒவ்வொரு மருத்துவமனையாகச் சென்று அனுமதி கோரிய கர்ப்பிணியின் குடும்பத்தினர், அடுத்த 6 மணி நேரமாக மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்த நிலையில், எதிர்பாராத விதமாக குழந்தை ஆட்டோவிலேயே பிறந்த நிலையில் உயிரிழந்துவிட்டது.

தற்போது கர்நாடகத்தில் கரோனா பேரிடரால் பல மருத்துவமனைகள் போதுமான மருத்துவ வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் 3,648 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,452 பேருக்கு கரோனா பாதித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.