'ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியம்' - பத்திரிகையாளர் கொலை குறித்து ராகுல் காந்தி ட்வீட்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தனது மருமகளை சிலர் துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
வாக்குறுதியில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி என்பவரை மர்ம நபர்கள் தாக்கியத்துடன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...