வடக்கு ஃபரியாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
டவ்லத் அபாத் மற்றும் அல்மர் மாவட்டங்களில் இந்த மோதல்கள் நடைபெற்றன. தலிபான்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தலிபான் ராணுவ தளபதி உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலில் மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் தலிபான் குழுவின் முகாம்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


