கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தியாவுக்குள் ஊருடுவ பாகிஸ்தான் முகாமில் 320 பயங்கரவாதிகள் தயார் நிலையில்

இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே பாகிஸ்தான் 27 பயங்கரவாத முகாம்களை செயல்படுத்தி, அதில் 320 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
இந்தியாவுக்குள் ஊருடுவ பாகிஸ்தான் முகாமில் 320 பயங்கரவாதிகள் தயார் நிலையில்
Updated On :27 ஜனவரி 2024, 5:02 pm

DIN

புது தில்லி: இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே பாகிஸ்தான் 27 பயங்கரவாத முகாம்களை செயல்படுத்தி, அதில் 320 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குழுக்களிடையே நடந்த பல்வேறு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு முக்கிய விவரங்களை சேகரித்திருக்கும் புலனாய்வுத் துறை அளித்த எச்சரிக்கையை அடிப்படையாக வைத்து, இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வெறும் 35 பயங்கரவாதிகள் மட்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதுவே 60 ஆக இருந்தது. 2020ன் முதல் அரையாண்டில் எல்லைப் பகுதியில் 429 முறை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இதேக் காலக்கட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் 605 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.