மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 10,320 பேருக்கு கரோனா; 265 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 10,320 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 10,320 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 10,320 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 265 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 7,543 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,22,118 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 2,56,158 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 1,50,662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...