அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 93 காவலர்களுக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜூன் 2020, 10:23 am

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் காவலர்களும் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்துள்ளது. இதில் 8 பேர் காவல் அலுவலர்கள்.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2,509 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27 காவலர்கள் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 67,655 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.