

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,501 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அங்கு புதிதாக 1,501 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 32,810 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,245 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 984 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.