ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் ஐந்து பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் இதுவரை மொத்த உயிரிழப்பு 51 ஆக உயர்ந்துள்ளது.
உலகையை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு நாளுக்கு நாள் பலியும், பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், வியாழக்கிழமை நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,651 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது 2,791 பேர் கரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,596 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1,37,448 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 1,41,029 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


