தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவ கவுடா கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

News image
Updated On :12 ஜூன் 2020, 2:39 pm

DIN

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவ கவுடா, கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

மேலும், கர்நாடகத்தில் இருந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜகவைச் சேர்ந்த அசோக் கஸ்தி மற்றும் இரானா கடாடி ஆகியோர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஜே.டி.எஸ். கட்சியின் குபேந்திர ரெட்டி மற்றும் பி.கே.ஹரிபிரசாத், காங்கிரஸின் ராஜீவ் கவுடா, பாஜகவின் பிரபாகர் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 25 உடன் முடிவாகிறது. காலியாகும் இந்த 4 இடங்களுக்கு தேவ கவுடா, மல்லிகார்ஜுன் கார்கே உள்பட 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ராஜ்யசபாவில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.