புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

மூளையில் ரத்தக் கசிவு: கேரள அமைச்சர் எம்எம் மணி மருத்துவமனையில் அனுமதி

கேரள மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம். மணி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :12 ஜூன் 2020, 12:57 pm

திருவனந்தபுரம்: கேரள மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம். மணி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவருக்கு சில உடல்நலக் குறைபாடுகள் இருந்ததால், ஏற்கனவே அதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலையை பரிசோதித்து, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது என்று மருத்துவமனை தெளிவுபடுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.