தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2020, 2:20 pm

DIN

கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறித்த விவரத்தை அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 999 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து,  அம்மாநிலத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.