ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :12 ஜூன் 2020, 7:27 am

PTI

மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான அசோக் சவாண், அமைச்சர் ஜிதேந்தி அவாத் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். 

இந்நிலையில், மராத்வாடா பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் மாநில செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து அவர்களது உதவியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், ஒரு சிலருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.