/

புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 202

புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக, அந்த மாநில மருத்துவ சேவை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார். 

News image
Updated On :15 ஜூன் 2020, 6:49 am

புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக, அந்த மாநில மருத்துவ சேவை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார். 

கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், உலக அளவில் பாதிப்பும் பலியும் தொடர்ந்து லட்சக்கணக்கில் அதிகரித்து வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்திருந்த புதுச்சேரியில், தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. 

புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 66 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 29 பேர் ஜிப்மரிலும், இருவர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும், நான்கு பேர் அரசு மருத்துவமனையிலும், மஹே, சென்னை மற்றும் தில்லியில் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை அந்த மாநிலத்தில் 202 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 95 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தொற்றுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.