புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளுக்கு திருமணம்: எளிமையாக நடந்தது (புகைப்படங்கள்)

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் - டி.ஒய்.எஃப்.ஐ. தேசியத் தலைவர் பி.ஏ. மொஹம்மத் ரியாஸ் திருமணம் இன்று காலை மிக எளிமையாக நடைபெற்றது.

News image

Kerala CM Pinarayi Vijayan's daughter Veena marries DYFI national president PA Mohammed Riyas

Updated On :15 ஜூன் 2020, 7:19 am


திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசியத் தலைவர் பி.ஏ. மொஹம்மத் ரியாஸ் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று காலை மிக எளிமையாக நடைபெற்றது.

கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

Story image

கரோனா பாதுகாப்புக் காரணங்களுக்காக மிகக் குறைவான உறவினர்களே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Story image

உறவினர்கள் தவிர்த்து, கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சஜீஷ் உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்றனர்.

Story image

பினராயி விஜயனின் மகள் வீணா, தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மணமகன் மொஹம்மது ரியாஸ் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எம். அப்துல் காதரின் மகனாவார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.