பொது முடக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டமில்லை: குஜராத் முதல்வர்

குஜராத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டமில்லை என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
பொது முடக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டமில்லை: குஜராத் முதல்வர்


குஜராத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டமில்லை என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கம் ஜூன் 1-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஜூன் 1 முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. பொது முடக்கத்துக்குப் பிறகு கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம், தில்லி , மகாராஷ்டிரம், குஜராத் போன்ற நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவி வந்தன. 

இதில் தில்லியில் பொது முடக்கம் அமல்படுத்தும் திட்டமில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஜராத்தில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தும் திட்டமில்லை என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

"ஜூன் 1 முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றாட வாழ்கை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. வணிகம் மற்றும் வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தப்படுவதற்கான எவ்வித திட்டமும் மாநில அரசிடம் இல்லை." 

குஜராத்தில் கடந்த ஒரு மாத காலமாக நாள்தோறும் சராசரியாக 400 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 23,590 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,478 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com