புதுவையில் மேலும் 27 பேருக்கு கரோனா: பாதிப்பு 271 ஆக உயர்வு

புதுவையில் அதிகபட்சமாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. 
புதுவையில் மேலும் 27 பேருக்கு கரோனா: பாதிப்பு 271 ஆக உயர்வு
Updated on
1 min read

புதுவையில் அதிகபட்சமாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவலின்படி, கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 4 பேரும், மாஹே அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். 

தற்போது 149 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 26 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார். 

அரசு மருத்துவக் கல்லூரியில் 120 பேரும், ஜிப்மரில் 22 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 6 பேரும், மாஹே அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் புதுவையில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 271 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 149 ஆகவும் உயர்ந்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com