நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: இன்று மட்டும் 3,752 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக இன்று (வியாழக்கிழமை) 3,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2020, 4:31 pm

DIN


மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக இன்று (வியாழக்கிழமை) 3,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,752 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,20,504 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 5,751 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,672 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 60,838 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,298 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 67 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,799 ஆகவும், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 3,309 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று 518 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,856 ஆக உயர்ந்துள்ளது. 27,634 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.