நாகலாந்தில் இன்று புதிதாக யாருக்கும் கரோனா இல்லை

நாகலாந்தில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்பட்வில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாகலாந்தில் இன்று புதிதாக யாருக்கும் கரோனா இல்லை
Published on
Updated on
1 min read

நாகலாந்தில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்பட்வில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் கடந்த சில தினங்களாக தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,68,557 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 12,274 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே சமயம், 1,61,440 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், 1,94,843 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாகலாந்தில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்பட்வில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தனது டிவிட்டரில், மாநிலத்தில் 317 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக யாருக்கு தொற்று கண்டறியப்படவில்லை.

தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 193 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 90 பேர் சிகிச்சையில் உள்ளனர். 103 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் நாகலாந்தில் கரோனா தொற்று இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com