மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடகத்தில் புதிதாக 337 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடக மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2020, 4:30 pm

கர்நாடக மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. எனினும், நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து 10 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 13,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,281-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அங்கு கரோனாவால் இன்று 10 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளளது. 230 பேர் இன்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்ததோர் எண்ணிக்கை 5210 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.