புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவுக்கு கரோனா

மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. 

News image
Updated On :20 ஜூன் 2020, 11:22 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாவாத் தொகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ. இவருக்கு நேற்று கரோனா அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும் தனியார் ஆய்வகம் ஒன்றில் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். 

அதில் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று மத்தியப் பிரதேசத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கரோனா பாதிப்புக்குள்ளான பாஜக எம்எல்ஏவும் வாக்களித்திருக்கிறார்.   

இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மத்தியப் பிரதேசத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.