ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா: இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2020, 2:35 pm

DIN

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொவைட்-19 நோயிலிருந்து குணமடைந்து வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, மொத்தம் 2,27,755 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,925  கொவைட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கொவைட்-19 நோயாளிகளில், குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது, 1,69,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

இன்று, குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர்களை விட 58,305 அதிகரித்துள்ளது.

பரிசோதனைக் கூடங்கள், சோதனைக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் ஒருங்கிணைந்த முயற்சியின் பலனாக, அரசு பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. ( மொத்தம் 981).

ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 1,90,730 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் சோதிக்கப்பட்ட மாதிரிகள் இதுவரை 68,07,226. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.