அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்துவது சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் அதனால் தேர்வுகளை ரத்து செய்யுமாறும் ஹரியாணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. 

மேலும், முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறும், இதனால் மதிப்பெண்கள் குறைவாகப் பெறும் சூழ்நிலையில் அந்தந்த மாணவர்கள் விரும்பும்பட்சத்தில் பொது முடக்கத்துக்குபின்னர் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்கள் வழங்கலாம் என்றும் குழு கூறியுள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழகங்களில் ஜூலை மாதத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.