பெங்களூரு: விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
விண்வெளித் துறையில் தனியார்மயத்தின் பங்களிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, வெகு காலமாக தொடர்ந்து செய்யப்பட்டு வரும் சமூக - பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக விண்வெளித்துறையின் சேவைகள் நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கும் சீர்திருத்தத்தை அடைய, விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதும், விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் பங்களிப்பும், பல முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் நிலைநிறுத்தும் என்றும் சிவன் கூறியுள்ளார்.
விண்வெளியில் தனியாா் பங்களிப்பு: விண்வெளிச் செயல்பாடுகளில் தனியாா் துறை பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விண்வெளித்துறையில் நீண்டகாலப் பயனளிக்கும் சீா்திருத்தங்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் மூலமாக இந்திய விண்வெளிக் கட்டமைப்புகளைப் பயன்படுத்த தனியாா் அமைப்புகளுக்கும் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர பிரசாத் தெரிவித்தாா்.
இந்தியாவை சுயச்சாா்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், தொழில்துறையின் அடிப்படையை விரிவுபடுத்துவதற்கும் விண்வெளித்துறை ஊக்கமளிப்பதாக செயல்படும். விண்வெளி உடைமைகள், தரவுகள், வசதிகள் ஆகியவற்றை அணுகுவது மேம்படுத்தப்படும் என்பது உள்பட விண்வெளி உடைமைகள், செயல்பாடுகள் அவற்றின் சமூக-பொருளாதார பயன்பாட்டை மேம்படுத்த, இந்தச் சீா்திருத்தங்கள் உதவும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம்
வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்களை தீா்க்கக் கோரி போராட்டம்

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


