டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சமாக இன்று 5,024 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2020, 3:48 pm

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4.90 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரம், தில்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில்  5,024 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 65,829 சிகிச்சையில் உள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 175 உயிரிழந்துள்ளனர். 

இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை 7,106 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தாராவியில் தொற்றால் பாதிக்கப்பட்டவவர்களின் எண்ணிக்கை 2,218ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1,019 பேர் சிகிச்சை உள்ளனர். அதேசமயம் இன்று உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. தாராவில் கரோனாவுக்கு இதுவரை 81 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.