காந்திநகர்: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சியின் அளவு குறித்த தகவல் மாநில சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி மாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதும், அதற்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் மற்றும் மாட்டிறைச்சி கொண்டு செல்வதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டு,அதற்கு ஆயுள் தண்டனை வழங்கபப்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகியும் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வது குறையவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மாநில சட்டப்பேரவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையொன்றில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் 110 டன் மாட்டு இறைச்சி காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், அதிகபட்சமாக சூரத் மாவட்டத்தில் இருந்து 55, 162 கிலோகிராம் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இறைச்சிக்காக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 3462 கால்நடைகள் காவல்துறையால் மீட்கப்பட்டதாகவும், அதிலும் அதிகபட்சமாக பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இருந்து 747 கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

0-4ல் தொடங்கி டாப்4ல் முடித்த ஹைதராபாத் கிங்ஸ்மேன்..! கேப்டனாக சாதித்த மார்னஸ் லபுஷேன்!
ஆப்பிள் ஐபோன் 18: விற்பனை எப்போது?

மணமகளே வா தொடரின் படப்பிடிப்பு நிறைவு! வைரலாகும் புகைப்படங்கள்!

அதிகாரம் யாருக்கு? தேர்தல் கருத்துக் கணிப்பு மீது இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன்?
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


