புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: திக்விஜய் சிங்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 மார்ச் 2020, 5:31 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்களை விலை பேசி வருவதாக பாஜக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் குர்கானில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று கூறுகையில், எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். கமல்நாத் இன்று போபாலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார். அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.