ராஜஸ்தான் சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் அருகே சொயின்டாரா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.


ஜோத்புர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் அருகே சொயின்டாரா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
புதுமணத் தம்பதிகளான விக்ரம் - சீதா ஆகியோருடன் பெண்கள், குழந்தைகள் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்த போது சொயின்டாரா கிராமத்துக்கு அருகே எதிரே வந்த டிரக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இரண்டு வாகனங்களும் சாலையில் மோதிய வேகத்தில் ஒன்று மீது ஒன்று ஏறிவிட்டது. இதனால், கிரெய்ன் வரவழைக்கப்பட்டு இரண்டு வாகனங்களும் பிரித்து, அதில் இருந்து காயமடைந்தவர்களும், உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...