ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வு

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :19 மார்ச் 2020, 6:27 am

DIN

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், கரோனா பவலைத் தடுக்க மத்திய, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸுக்கு இதுவரை 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கர்நாடகத்தில் தற்போது மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் சவுதி அரேபியாவில் இருந்து குடகு மாவட்டம் திரும்பிய நபருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை அம்மாநில சுகதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனயில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.