மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை: உலவும் போலி அரசாணை

ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு அரசாணை போலியாக பரப்பப்பட்டு வருகிறது.

News image

4ஜி இணைய சேவை

Updated On :27 மார்ச் 2020, 2:07 pm

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு அரசாணை போலியாக பரப்பப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு நீக்கப்பட்டதையடுத்து அங்கு தகவல் தொடர்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பின்னர் 2ஜி சேவை மற்றும் இணைய தள தொடர்பு உள்ளிட்ட வசதிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வந்தன.

அதேநேரம் ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலைத் தாங்கிய மின்னஞ்சல்கள் மற்றும் வாட்சப் செய்திகள் புதன் மதியத்தில் இருந்து வலம்வரத் துவங்கின.

இதுதொடர்பாக மாநில தகவல் தொடர்புத் துறை புதன் இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் 4ஜி சேவை குறித்த தகவல் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் 2G இணைய சேவை மட்டும் வழங்குவது என்றும் அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு அரசாணை வெள்ளியன்று மீண்டும் போலியாக பரப்பப்பட்டு வருகிறது.

மத்திய உள்துறை செயலர் கையெழுத்துடன் இருப்பது போன்று அந்த அரசாணையானது இணைய தளங்கள் மற்றும் வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

இந்த தகவலுக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.