பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து தொடர்பாக...

News image

இரு மலர்கள் தொடர் போஸ்டர். - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:51 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரு மலர்கள் தொடர் 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இந்தத் தொடர் குழுவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து இரு மலர்கள் என்ற தொடரில் நடிக்கிறார்கள். இந்தத் தொடரின் நாயகனாக நடிகர் சந்தோஷ் நடிக்கிறார்.

நண்பர்களான ஹிமா பிந்து, ஜீவிதா மற்றும் நாயகனான சந்தோஷ் இருவர்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

இரு மலர்கள் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தத் தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவையடுத்து, இரவு 11 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் தொடர்களில், இரு மலர்கள் தொடர் மக்கள் மனங்களைக் கவர்ந்து முன்னணி தொடராக இருந்து வருகிறது. நான் பிரைம் எனப்படும் மதிய நேர தொடர்களின் டிஆர்பியில் இரு மலர்கள் தொடர் முன்னணியில் உள்ளது.

Story image

இந்த நிலையில், இரு மலர்கள் தொடர் 100 நாள்களைக் கடந்துள்ளதாக தொடர் குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இரு மலர்கள் தொடர் கடந்த ஜன. 19 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

As Iru Malargal, the series currently airing on Sun TV, has crossed the 100-day mark, fans are extending their congratulations to the show.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.