மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அவர்களை சங்கடமாக விரும்பத்தகாதவர்களாக உணர வைக்காதீர்கள்: சச்சின் வேண்டுகோள்

கரோனா நோயாளிகளை சங்கடமாக விரும்பத்தகாதவர்களாக உணர வைக்காதீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image

சச்சின்

Updated On :27 மார்ச் 2020, 12:32 pm

மும்பை: கரோனா நோயாளிகளை சங்கடமாக விரும்பத்தகாதவர்களாக உணர வைக்காதீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 753 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17  பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா நோயாளிகளை சங்கடமாக விரும்பத்தகாதவர்களாக உணர வைக்காதீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைக்கச் செய்வது என்பது ஒரு சமூகமாக நமது கடமையாகும்.  நாம்தான் அவர்களை பார்த்துக் கொள்வதோடு, அவர்கள் சங்கடமாக உணராமல் இருக்கச் செய்ய வேண்டும்.

கரோனா நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவர அரசும் சுகாதார நிறுவனங்களும் பரிந்துரைக்கும் வழிமுறைகளைக் நாம் அனைவரும் கவனமாக கையாள வேண்டும்.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தேவையிலாதவர்களாக உணரச் செய்யக் கூடாது என்பதிலும் நாம் உறுதியாக் இருக்க வேண்டும்.

கரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவயான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வெல்லலாம்.  

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.