கேரள மாநிலத்தில் இன்று யாருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
கேரளத்தில் இன்று யாருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.


கேரளத்தில் இன்று யாருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது 35,043 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 1,147 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 8,888 பேர் குணமடைந்துள்ளனர். கேரளத்தில் இன்று யாருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். அதேசமயம் இன்று 9 பேர் குணமடைந்துள்ளனர்.
இத்துடன் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கேரளத்தில் கரோனாவுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...