குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லியில் மேலும் 384 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,122ஆக உயர்வு

தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயித்தைத் தாண்டியுள்ளது. 

News image
Updated On :3 மே 2020, 11:35 am

DIN

தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயித்தைத் தாண்டியுள்ளது. 

வேகமாக பரவி வரும் கரோனா நோய் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் முதல்கட்டமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், நோய்த் தொற்று கட்டுப்படாததால் மே 3-ஆம் தேதி வரை மேலும் 19 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

இதனிடையே, அமலிலுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தில்லியில் நேற்று மேலும் 384 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இத்துடன் தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,122ஆக உள்ளது. அவர்களில் 1,256 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர். நாம் கரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், அது நீண்ட காலத்துக்கு இருக்கும்". இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.