இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,263-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னா் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது சில தளா்வுகளுடன் மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,306-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2487 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 83 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...