புவனேஸ்வர்: ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த 77 வயது முதியவர் பலியானதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி 77 வயது முதியவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11 முதல் 20 வரை அரசு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலும், ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை வீட்டு தனிமைப்படுத்தலிலும் இருந்தார்.
ஏப்ரல் 28-ல் மீண்டும் அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவருக்கு ஏற்கெனவே உயர் இரத்த அழுத்தம், நீரழிவு மற்றும் சிறுநீரக நோய்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, புவனேஸ்வரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மூச்சுத் திணறல் காரணமாக இன்று உயிரிழந்தார்.
மதுசூதன் நகர்ப் பகுதியில் வசித்து வந்த அந்த நபர், மற்றொரு கரோனா நோயாளியின் நெருங்கிய உறவினர் ஆவார். ஏப்ரல் 6-ம் தேதி புவனேஸ்வரின் ஜார்பாடாவைச் சேர்ந்த 72 வயது நபர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து இரண்டாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், மேலும் மூன்று பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் வரை மொத்த பாதிப்பு 179 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


