இந்தியாவில் கரோனா சமூகத் தொற்றாக மாறியுள்ளதா? ஐசிஎம்ஆர் ஆய்வு

இந்தியாவில் கரோனா நோயாளிகளை அதிகம் கொண்ட 75 மாவட்டங்களில், தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா? என்பது குறித்த ஆய்வில் ஐசிஎம்ஆர் இறங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


புது தில்லி: இந்தியாவில் கரோனா நோயாளிகளை அதிகம் கொண்ட 75 மாவட்டங்களில், தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா? என்பது குறித்த ஆய்வில் ஐசிஎம்ஆர் இறங்கியுள்ளது.

இந்த ஆய்வை, கரோனா பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்திருந்த நிலையில்தான் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித பரிசோதனைக் கருவிகளின் முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இதனை இஎல்ஐஎஸ்ஏ (ELISA) பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிஎம்ஆர் மூத்த ஆராய்ச்சியாளர் கூறுகையில், நாட்டில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு இந்தக் கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களது உடலில் கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகையில், இந்த ஆய்வின் மூலம், பொதுமக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பது தெரிய வரும். இந்த ஆய்வில் கிடைக்கும் தகவல்களை அடுத்த வாரத்தில் ஐசிஎம்ஆர் வெளியிடும் என்று தெரிவித்தார்.

கரோனா துரித பரிசோதனைக் கருவியைப் போன்றதுதான் இஎல்ஐஎஸ்ஏ பரிசோதனைக் கருவியும். ஆனால் இந்த கருவிக்கு ஐசிஎம்ஆர்-ன் உரிமம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com