நாட்டில் ஐக்யூஓஓ 15 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டபோது 12ஜிபி / 256 ஜிபே மாடல்களின் விலைகள் ரூ.72,999 ஆக இருந்தது.
தற்போது இ-வணிக இணையதளங்களிலும் இந்த விலைதான் நீடிக்கிறது. ஆனால், இதனை வாங்கும்போது சில கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது போன்றவற்றுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விலைகளில் மாற்றங்கள் இருக்கலாம். அது இ-வணிக நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.
செல்போன் பிரியர்களால் அதிகம் தேடப்படும் ஐக்யூஓஓ 15 ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகி வரும் நிலையில், தற்போது இந்த சலுகைகள் அந்த விற்பனையை இரண்டு மடங்காக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5, க்யூ3 கேமிங் சிப் வசதியுடன் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட ஐக்யூஓஓ 15, அதிக நேரம் விளையாடுபவர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
6.85 இன்ச் டிஸ்ப்ளே, 2கே எல்டிபிஓ அமோல்டு பேனல் மற்றும் 1443Hz ரிஃப்ரஷ் ரேட் உடன் டால்ஃபி விஷன் என கலக்கலாக அமைந்திருக்கிறது இதன் ஃபீச்சர்கள்.
அமேஸான் போன்ற இ-வணிக நிறுவனங்கள், இதனை விலைத் தள்ளுபடியில் வழங்குவதோடு, சில வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது அதற்கும் கூடுதலாக ரூ.2000 முதல் ரூ.3000 வரை சலுகை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
IQOO 15 smartphone at a price discount of Rs. 6000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?

டியுஎஸ்ஐபி நிலத்தில் வருவாய் ஈட்டும் திட்டங்களைச் செயல்படுத்த தில்லி அரசு ஆலோசனை

8,000 mAh பேட்டரியுடன் ரியல்மி பி4ஆர் 5ஜி... வேறென்ன எதிர்பார்க்கலாம்?







