உச்ச நீதிமன்றத்தின் அண்மை உத்தரவுக்கு இணங்க, நகரத்திற்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கான திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டணங்களை (ஈ. சி. சி) உடனடியாக அமல்படுத்துவதாக தில்லி மாநகராட்சி (எம். சி. டி) தெரிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாசுபடுத்தும் வாகனங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திருத்தப்பட்ட விகிதங்கள், பல்வேறு பிரிவுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த உத்தரவின் படி, வகை 2 வாகனங்கள் (இலகுரக வணிக வாகனங்கள்) மற்றும் வகை 3 வாகனங்கள் (இரு அச்சு லாரிகள்) ஈசிசி ரீ.1,400-லிருந்து ரூ.2,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு, கட்டணங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
வகை 4 வாகனங்கள் (மூன்று அச்சு லாரிகள்) மற்றும் வகை 5 வாகனங்கள் (நான்கு அச்சு லாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்டவை) இப்போது ரூ.2500-த்தில் இருந்து ரூ.4000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிக ஈசிசி விகிதங்களுக்கு அழைப்பு விடுத்த எம்சி மேத்தா ஸ்ள் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடா்ந்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் தில்லிக்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கு ஈசிசி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகரத்திற்குள் நுழையும் அனைத்து வணிக வாகனங்களுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன, மேலும் அவை தற்போதுள்ள சுங்கச்சாவடிக்கு கூடுதலாகும். தினசரி குறைந்தது 4000 லாரிகள் தேசிய தலைநகருக்குள் நுழைகின்றன என்றும், இந்த அதிகரிப்பு குறிப்பாக கனமான மற்றும் அதிக மாசுபடுத்தும் வாகனங்களுக்கு ஒரு தடுப்பு நடவடிக்கையாக செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மத்திய ரிட்ஜ் 673 ஹெக்டோ் நிலப்பகுதிக்கு ‘பாதுகாக்கப்பட்ட வனம்’ அந்தஸ்து! - தில்லி அரசு நடவடிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்

சரக்கு வாகனங்களுக்கு நேரக் கட்டுபாடு விதிக்கப்படுமா!

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
