கரோனா: தில்லியில் ஒரேநாளில் 13 பேர் பலி; மொத்த பாதிப்பு 7,639 ஆக அதிகரிப்பு
தில்லியில் புதிதாக 406 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


தில்லியில் புதிதாக 406 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தில்லியில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில்,
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் (மே 11 நள்ளிரவு 12 மணி வரை) புதிதாக 406 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்த பாதிப்பு 7,639 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,512 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 383 பேர் வீடு திரும்பினர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தில்லியில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...